டிஜிட்டல் இந்தியா கார்ப்ரேஷனில் (DIC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Manager, Assistant Manager, Legal Officer ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த DIC நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த DIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் http://careers.ecil.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.