டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் (DIC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Content Writer & Researcher மற்றும் Content Creator, Writer பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Content Writer & Researcher பணிக்கு என 02 பணியிடங்களும், Content Creator, Writer பணிக்கு என 01 பணியிடமும் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் (DIC) காலியாக உள்ளது.
இந்த DIC நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
இந்த DIC நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் DIC நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.