ரூ.60,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - 08ம் / 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!   

By Gokula Preetha - February 8, 2023
14 14
Share
ரூ.60,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - 08ம் / 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!   


விருதுநகர், மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் (DHS, Virudhunagar) கீழ்வரும் நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Officer, Health Inspector, Hospital Worker / Support Staff ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.  

மாவட்ட நலவாழ்வு சங்க பணியிடங்கள்:
 • விருதுநகர், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS, Virudhunagar) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
 • Medical Officer - 05 பணியிடங்கள்
 • Health Inspector - 05 பணியிடங்கள்
 • Hospital Worker / Support Staff - 05 பணியிடங்கள்
DHS பணிக்கான கல்வி தகுதி:
 • Medical Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த  பாடப்பிரிவில் MBBS Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • Health Inspector பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு + MPHW முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • Hospital Worker / Support Staff பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DHS பணிக்கான வயது வரம்பு:
 • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
 • Health Inspector, Hospital Worker / Support Staff பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
DHS பணிக்கான சம்பளம்:
 • Medical Officer பணிக்கு ரூ.60,000/- என்றும்,
 • Health Inspector பணிக்கு ரூ.14,000/- என்றும்,
 • Hospital Worker / Support Staff பணிக்கு ரூ.8,500/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் தேர்வு செய்யும் விதம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நலவாழ்வு சங்கம் விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (22.02.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF 
     
Share
...
Gokula Preetha