08ம் வகுப்பு / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
இராமநாதபுர மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Ramanathapuram) ஆனது நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:
- மருத்துவ அலுவலர் - 03 பணியிடங்கள்
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் - 09 பணியிடங்கள்
- சுகாதாரப் பணியாளர் - 03 பணியிடங்கள்
DHS பணிக்கான கல்வி தகுதி:
- மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- சுகாதாரப் பணியாளர் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DHS பணிக்கான வயது வரம்பு:
- மருத்துவ அலுவலர் பணிக்கு 40 வயது எனவும்,
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு 35 வயது எனவும்,
- சுகாதாரப் பணியாளர் பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
DHS பணிக்கான சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது DHS நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
DHS Ramanathapuram தேர்வு செய்யும் முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS Ramanathapuram விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (20.02.2023) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.