8ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை - 138 காலிப்பணியிடங்கள் || ரூ.60,000/- ஊதியம்!
மதுரை, மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Madurai) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் மருத்துவ அலுவலர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்ட நலவாழ்வு சங்க பணியிடங்கள்:
- மதுரை, மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Madurai) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- மருத்துவ அலுவலர்கள் (Medical Officer) - 46 பணியிடங்கள்
- பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் (Multipurpose Health Worker) - 46 பணியிடங்கள்
- பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (Multipurpose Hospital Worker) - 46 பணியிடங்கள்
DHS பணிக்கான கல்வி விவரம்:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- மருத்துவ அலுவலர்கள் - MBBS
- பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் - 12ம் வகுப்பு
- பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - 08ம் வகுப்பு
DHS பணிக்கான வயது விவரம்:
- பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் (Multipurpose Health Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
- மருத்துவ அலுவலர்கள் (Medical Officer), பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (Multipurpose Hospital Worker) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
DHS பணிக்கான ஊதிய விவரம்:
- மருத்துவ அலுவலர்கள் பணிக்கு ரூ.60,000/- என்றும்,
- பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் பணிக்கு ரூ.14,000/- என்றும்,
- பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு ரூ.8,500/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
DHS Madurai தேர்வு செய்யும் முறை:
இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Madurai) சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHS Madurai விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.02.2023) தபால் செய்ய வேண்டும்.