மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.34,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு!

By Gokula Preetha - February 3, 2023
14 14
Share
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.34,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு!
 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Kancheepuram) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Dental Surgeon, Staff Nurse, Dental Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.34,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:
  • மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS Kancheepuram) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Dental Surgeon - 01 பணியிடம்
  • Trauma Registry Assistant (Staff Assistant) - 02 பணியிடங்கள்
  • Dental Assistant - 03 பணியிடங்கள்
  • Auxiliary Nurse Midwife - 02 பணியிடங்கள்
  • NPHCE Physiotherapists -  01 பணியிடம்
  • Data Entry Operator - 01 பணியிடம்
  • Multi Purpose Hospital Worker - 04 பணியிடங்கள்
DHS பணிக்கான கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Dental Surgeon - BDS
  • Trauma Registry Assistant (Staff Assistant) - Nursing பாடப்பிரிவில் Diploma / Degree
  • Dental Assistant - 10ம் வகுப்பு
  • Auxiliary Nurse Midwife - 10ம் வகுப்பு
  • NPHCE Physiotherapists - Physiotherapy பாடப்பிரிவில் Bachelor's Degree (BPT)
  • Data Entry Operator - ஏதேனும் ஒரு Degree
  • Multi Purpose Hospital Worker - தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்
DHS பணிக்கான வயது வரம்பு:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

DHS பணிக்கான ஊதியம்:
  • Dental Surgeon பணிக்கு ரூ.34,000/- என்றும்,
  • Trauma Registry Assistant (Staff Assistant) பணிக்கு ரூ.14,000/- என்றும்,
  • Dental Assistant பணிக்கு ரூ.13,800/- என்றும்,
  • Auxiliary Nurse Midwife பணிக்கு ரூ.14,000/- என்றும்,  
  • NPHCE Physiotherapists பணிக்கு ரூ.13,000/- என்றும்,
  • Data Entry Operator பணிக்கு ரூ.13,500/- என்றும்,
  • Multi Purpose Hospital Worker பணிக்கு ரூ.8,500/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
DHS தேர்வு செய்யும் முறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதார பணிகள், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501 என்ற அலுவலக முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். 15.02.2023 என்ற இறுதி நாளுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்     

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha