திண்டுக்கல், மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Staff Nurse, MLHP, Dental Surgeon போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 71 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திண்டுக்கல், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
DHS பணிக்கான கல்வி தகுதி:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, Diploma, B.Sc, DNM, BDS, MDS, ANM, B.Pharm, D.Pharm, BASLP, DMLT ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.8,500/- முதல் ரூ.34,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 01.02.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.