ரயில்வே துறை கீழ் வரும் DFCCIL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Junior Manager (Admin) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், DFCCIL நிறுவனத்தில் Junior Manager (Admin) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Junior Manager (Admin) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Manager (Admin) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.