DFCCIL நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!!

By Gokula Preetha - February 8, 2023
14 14
Share
DFCCIL நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!!


ரயில்வே துறை கீழ்வரும் DFCCIL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Instructor, Safety Counsellor / Safety Officer, Chief Counsellor ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

DFCCIL பணியிடங்கள்:

DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Instructor, Safety Counsellor / Safety Officer, Chief Counsellor பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  

DFCCIL பணிக்கான தகுதிகள்:
  • Instructor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ZRITs / ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் 02 ஆண்டுகள் Teaching துறையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Safety Counsellor / Safety Officer, Chief Counsellor பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறையில் Level - 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.  
DFCCIL பணிக்கான வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

DFCCIL பணிக்கான ஊதிய விவரம்:

இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 21.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha