ரயில்வே துறை கீழ் இயங்கிவரும் DFCCIL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Dy. PM, ACPM / Dy CPM / PM (S&T) ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Dy. PM, ACPM / Dy CPM / PM (S&T) ஆகிய பணிகளுக்கு என தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது DFCCIL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.