DFCCIL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Consultant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DFCCIL நிறுவனத்தில் Consultant (Electrical) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் DFCCIL நிறுவனத்தில் Electrical துறையில் Level - 11, E0 முதல் E4 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive, Manager போன்ற பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Consultant (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.02.2023 அன்றைய தினத்தின் படி, 64 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
24.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த DFCCIL நிறுவன பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.