DFCCIL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் ACPM / Dy. CPM / PM (Civil) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DFCCIL நிறுவனத்தில் ACPM / Dy. CPM / PM (Civil) பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
ACPM / Dy. CPM / PM (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.