மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் NCDE நிறுவனத்தில் காலியாக உள்ள Clinical Prosthetist and Orthotist பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Clinical Prosthetist and Orthotist பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே CRPF நிறுவனத்தில் காலியாக உள்ளது.
CRPF நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Prosthetics and Orthotics பாடப்பிரிவில் Master Degree (MPO) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Clinical Prosthetist and Orthotist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
இந்த CRPF நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
Clinical Prosthetist and Orthotist பணிக்கு தகுதியான நபர்கள் 27.02.2023 அன்று அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த CRPF நிறுவன பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.