CRPF வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு 2023- பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!

By Gokula Preetha - February 2, 2023
14 14
Share
CRPF வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு 2023- பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!!


CRPF என்னும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Headmistress, Teachers, Ayahs ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Interview cum-Selection Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.      

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்கள்:
  • Headmistress - 01 பணியிடம்
  • Teachers - 06 பணியிடங்கள்
  • Ayahs - 04 பணியிடங்கள்
CRPF பணிக்கான கல்வி தகுதி:
  • Headmistress, Teachers பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree + Diploma (Nursing) அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Ayahs பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CRPF பணிக்கான வயது விவரம்:
  • Headmistress பணிக்கு 30 வயது முதல் 40 வயது வரை என்றும்,
  • Teachers பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை என்றும்,
  • Ayahs பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
CRPF பணிக்கான சம்பளம்:
  • Headmistress பணிக்கு ரூ.9,000/- எனவும்,  
  • Teachers பணிக்கு ரூ.8,000/- எனவும்,  
  • Ayahs பணிக்கு ரூ.6,000/- எனவும் மாத சம்பளமாக தரப்படும்.  
CRPF தேர்வு செய்யும் விதம்:

இந்த CRPF பணிகளுக்கு தகுதியான நபர்கள் 28.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Walk-in Interview cum-Selection Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CRPF விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 25.02.2023 என்ற கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Walk-in Interview cum-Selection Test வரும் போது விண்ணப்பத்தை நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification PDF
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us