CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!  

By Gokula Preetha - February 9, 2023
14 14
Share
CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!  


Placement Consultant, Lecturer, Instructor Skill Development பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை CIPET நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 09.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIPET நிறுவன பணியிடங்கள்:
  • CIPET நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Placement Consultant - 01 பணியிடம்
  • Lecturer - 04 பணியிடங்கள்
  • Instructor Skill Development  - 05 பணியிடங்கள்
CIPET பணிக்கான கல்வி விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும். 
  • Placement Consultant - ஏதேனும் ஒரு Graduate Degree, MBA (HRM / PM)
  • Lecturer - பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree, Ph.D, ME, M.Tech
  • Instructor Skill Development  - BE, B.Tech, Diploma
CIPET பணிக்கான வயது விவரம்:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 09.03.2023 அன்றைய தினத்தின் படி, 64 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.  

CIPET பணிக்கான சம்பள விவரம்:
  • Placement Consultant பணிக்கு ரூ.40,000/- என்றும்,
  • Lecturer பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை என்றும்,
  • Instructor Skill Development பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை என்றும் மாத சம்பளம் வழங்கப்படும்.
CIPET நிறுவன தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து 09.03.2023 என்ற இறுதி நாளுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.  

Download Short Notification Link 
Download Notification Link 1
Download Notification Link 2
Download Application Form Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us