CIPET நிறுவன வேலைவாய்ப்பு - ரூ.40,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!
CIPET நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor, Lecturer, Assistant Placement Consultant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CIPET நிறுவன காலிப்பணியிடங்கள்:
- CIPET நிறுவனத்தில் Assistant Professor, Lecturer, Assistant Placement Consultant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 15 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Assistant Professor - 09 பணியிடங்கள்
- Lecturer - 05 பணியிடங்கள்
- Assistant Placement Consultant - 01 பணியிடம்
CIPET பணிக்கான கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering, Technology பாடப்பிரிவில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Assistant Professor - BE, B.Tech, ME, M.Tech, Master Degree, Ph.D
- Lecturer - Bachelor's Degree, Master Degree, ME, M.Tech, Ph.D
- Assistant Placement Consultant - Graduate Degree, MBA
CIPET பணிக்கான வயது வரம்பு:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
CIPET பணிக்கான ஊதிய விவரம்:
- Assistant Professor பணிக்கு ரூ.35,000/- முதல் ரூ.40,000/- வரை என்றும்,
- Lecturer பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை என்றும்,
- Assistant Placement Consultant பணிக்கு ரூ.35,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
CIPET நிறுவன தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CIPET நிறுவன விண்ணப்பிக்கும் முறை:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
CIPET நிறுவன இறுதி நாட்கள்:
- Assistant Professor - 14.02.2023
- Lecturer - 20.02.2023
- Assistant Placement Consultant - 20.02.2023