பெருநகர சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - ரூ.90,000/- ஊதியம்!  

By Gokula Preetha - February 21, 2023
14 14
Share
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - ரூ.90,000/- ஊதியம்!  


பெருநகர சென்னை மாநகராட்சியில் (GCC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள Obstetrician / Gynecologist, Pediatrician போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன்
உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  

பெருநகர சென்னை மாநகராட்சி பணியிடங்கள்:
  • பெருநகர சென்னை மாநகராட்சியில் (GCC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Obstetrician / Gynecologist - 11 பணியிடங்கள்
  • Pediatrician - 09 பணியிடங்கள்
  • General Surgeon - 13 பணியிடங்கள்
  • Anaesthetist - 12 பணியிடங்கள்
  • Orthopedic Surgeon - 01 பணியிடம்
GCC பணிக்கான கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS + MD / MS / Diploma பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

GCC பணிக்கான வயது விவரம்:

இந்த பெருநகர சென்னை மாநகராட்சி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

GCC பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியமாக தரப்படும்.

GCC பணிக்கான தேர்வு முறை:

இந்த பெருநகர சென்னை மாநகராட்சி சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

GCC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22.02.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.   

Download Notification PDF
Share
...
Gokula Preetha