கோவை மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இரவுக்காவலர் (Night Watchman) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 28.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோவை மாவட்ட, மத்திய சிறைச்சாலையில் இரவுக்காவலர் (Night Watchman) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, 32 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த மத்திய சிறைச்சாலை சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் தரப்படும்.
இரவுக்காவலர் (Night Watchman) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த மத்திய சிறைச்சாலை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (28.02.2023) தபால் செய்ய வேண்டும்.