சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Deputy Engineer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,40,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Deputy Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, M.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Deputy Engineer (Engineer Trainee) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.28,000/- முதல் ரூ.30,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த CEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (13.03.2023) தபால் செய்ய வேண்டும்.