PESB ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் CCL நிறுவனத்தில் Director (Technical) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,90,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Director (Technical) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Central Coalfields Ltd-ல் காலியாக உள்ளது.
இந்த CCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mining Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Mining Operation, Mining Planning போன்ற பணி சார்ந்த துறைகளில் Senior Management Level கீழ்வரும் பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director (Technical) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,60,000/- முதல் ரூ.2,90,000/- வரை ஆண்டு ஊதியமாக கொடுக்கப்படும்.
இந்த CCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.