மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Cement Corporation of India Limited (CCI) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Consultant பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Consultant (Foreman) பணிக்கு என 02 பணியிடங்களும், Consultant (Blaster) பணிக்கு என 01 பணியிடமும் Cement Corporation of India Limited-ல் (CCI) காலியாக உள்ளது.
இந்த CCI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், D.G.M.S ஆல் அங்கீகரிக்கப்பட்ட Statutory Blaster பிரிவிற்கான சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Consultant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 05 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
இந்த CCI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20.02.2023 அன்றைய நாளின் படி, 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Consultant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.17,000/- முதல் ரூ.18,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
இந்த CCI நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 20.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
Consultant பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.