Diploma முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - ரூ.15,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

By Gokula Preetha - February 4, 2023
14 14
Share
Diploma முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - ரூ.15,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!


மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான CCI நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Raw Mill, Coal Mill Operator / Chemical Engineer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Cement Corporation of India Limited-ல் (CCI) காலியாக உள்ள Raw Mill, Coal Mill Operator / Chemical Engineer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Operator / Chemical Engineer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Operator / Chemical Engineer வயது வரம்பு:

Raw Mill, Coal Mill Operator / Chemical Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10.02.2023 அன்றை நாளின் படி, 62 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Operator / Chemical Engineer சம்பளம்:

இந்த CCI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

CCI நிறுவன தேர்வு செய்யும் விதம்:

10.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

CCI நிறுவனம் விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification PDF
Share
...
Gokula Preetha