மத்திய புலனாய்வு பணியகம் (CBI) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Assistant Library and Information Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.34,800/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய புலனாய்வு பணியகத்தில் (CBI) Assistant Library and Information Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Assistant Library and Information Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Library Science பாடப்பிரிவில் Diploma, Bachelor's Degree, Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் PB-2 Rs. 9300 - 34800/- plus grade pay of Rs.4200/- என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த மத்திய புலனாய்வு பணியக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Assistant Library and Information Officer பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது PB-2 (Rs.9300 - 34800/- With GP Rs.4600/-) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய புலனாய்வு பணியக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 60 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.