Central Bank of India வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
Central Bank of India வங்கியில் (CBI Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Faculty, Choukidar cum Mali மற்றும் FLCC பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Faculty, Choukidar cum Mali மற்றும் FLCC பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
CBI வங்கி பணிக்கான கல்வி தகுதி:
- Faculty, FLCC பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு BA, B.Sc, B.Ed, MSW, MA, Graduate Degree அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- Choukidar cum Mali பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
CBI வங்கி பணிக்கான வயது வரம்பு:
- Faculty, FLCC பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Choukidar cum Mali பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CBI வங்கி பணிக்கான ஊதியம்:
- Faculty பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- FLCC பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Choukidar cum Mali பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.6,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Central Bank of India தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Bank of India விண்ணப்பிக்கும் முறை:
இந்த Central Bank of India வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை
உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.03.2023) தபால் செய்ய வேண்டும்.