மாதம் பிறந்தால் ரூ.25,000/- ஊதியத்தில் Central Bank of India-ல் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!    

By Gokula Preetha - February 7, 2023
14 14
Share
மாதம் பிறந்தால் ரூ.25,000/- ஊதியத்தில் Central Bank of India-ல் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!    


Central Bank of India வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் FLCC Counselor மற்றும் Director RSETI பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CBI Bank காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வங்கியில் FLCC Counselor, Director RSETI பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

FLCC Counselor / Director RESTI கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Post Graduate Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.  

FLCC Counselor / Director RSETI அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

FLCC Counselor / Director RSETI வயது வரம்பு:

இந்த CBI வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

FLCC Counselor / Director RSETI ஊதியம்:
  • FLCC Counselor பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • Director RSETI பணிக்கு ரூ.25,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
CBI Bank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CBI Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த CBI வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (22.02.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link 1
Download Notification & Application Link 2
Share
...
Gokula Preetha