Group Chief Risk Officer, Chief Digital Officer, Chief Technology Officer பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை கனரா வங்கி (Canara Bank) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 06.03.2023 அன்று வரை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், கனரா வங்கியில் (Canara Bank) Group Chief Risk Officer, Chief Digital Officer, Chief Technology Officer ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, CFA, BE, B.Tech, MCA ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த கனரா வங்கி (Canara Bank) சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Screening / Shortlisting மற்றும் Interview / Interaction வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கனரா வங்கி (Canara Bank) சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://canarabank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.03.2023) சமர்ப்பிக்க வேண்டும்.