BPCL நிறுவனத்தில் வேலை - 60+ காலிப்பணியிடங்கள் || Degree / Diploma முடித்திருந்தால் போதும்!
Graduate Apprentices, Diploma Apprentices பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை BPCL நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 66 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BPCL நிறுவன காலிப்பணியிடங்கள்:
BPCL நிறுவனத்தில் Graduate Apprentices பணிக்கு என 14 பணியிடங்களும், Diploma Apprentices பணிக்கு என 52 பணியிடங்களும் காலியாக உள்ளது.
Graduate / Diploma Apprentices கல்வி தகுதி:
- Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.Com, BE, B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Diploma Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Graduate / Diploma Apprentices வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் SC / ST / PWBD - 05 ஆண்டுகள் மற்றும் OBC (NCL) - 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
Graduate / Diploma Apprentices ஊதியம்:
- Graduate Apprentices பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Diploma Apprentices பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
BPCL நிறுவன தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Personal Interview, Merit List ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
BPCL நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த BPCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 28.01.2023 அன்று முதல் 06.02.2023 அன்று வரை https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற அதிகார்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.