BOB Financial நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

By Gokula Preetha - February 20, 2023
14 14
Share
BOB Financial நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!


BOB Financial நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் VP / AVP மற்றும் Senior Officer / Officer பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

BOB Financial பணியிடங்கள்:

BOB Financial நிறுவனத்தில் IT Infrastructure, Collection, Card Operation, Card Insurance, Customer Experience ஆகிய துறைகளில் காலியாக உள்ள VP / AVP மற்றும் Senior Officer / Officer பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  

VP / AVP, Senior Officer / Officer கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, Post Graduate Degree அல்லது Professional Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

VP / AVP, Senior Officer / Officer வயது விவரம்:
  • VP / AVP (IT Infrastructure) பணிக்கு 55 வயது எனவும்,
  • Senior Officer / Officer பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
VP / AVP, Senior Officer / Officer ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு BOB Financial நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

BOB Financial தேர்வு செய்யும் முறை:

இந்த BOB Financial நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BOB Financial விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் Senior Officer / Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை careers@bobfinancial.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

BOB Financial இறுதி நாட்கள்:

VP / AVP (IT Infrastructure)  - 28.02.2023

Senior Officer / Officer - 25.02.2023


Download Notification & Application Link



  

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us