Bank of Baroda வங்கி காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!!  

By Gokula Preetha - February 6, 2023
14 14
Share
Bank of Baroda வங்கி காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!!  


Bank of Baroda வங்கி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Business Correspondent Supervisor பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.  

Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Bank of Baroda வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு என 09 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor கல்வி தகுதி:

Graduate Degree, BE (IT), M.Sc (IT), MCA,, MBA ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Business Correspondent Supervisor முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PSU வங்கிகளில் Chief Manager பதவியில் அல்லது BOB வங்கியில் Clerk பதவியில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.  

Business Correspondent Supervisor வயது வரம்பு:

Business Correspondent Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அனுபவம் உள்ளவராக இருப்பின் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Business Correspondent Supervisor ஊதியம்:

இந்த Bank of Baroda வங்கி சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.    

Bank of Baroda தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank of Baroda விண்ணப்பிக்கும் விதம்:

Business Correspondent Supervisor பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.02.2023 என்ற இறுதி நாளுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும்.  

Download Notification Link
Download Application Form Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us