Bank of Baroda (BOB Bank) வங்கி ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business Correspondent Supervisor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Bank of Baroda (BOB Bank) வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
அரசு அல்லது அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, BE (IT), M.Sc (IT), MCA, MBA பட்டம் பெற்றவர்கள் BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PSU வங்கியில் Chief Manager பதவியில் அல்லது BOB வங்கியில் Clerk பதவியில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த BOB வங்கி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் ரூ.15,000/- + ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
BC Supervisor பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 20.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.