Speech Therapist, Technical Assistant, OT Technician போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 06.03.2023 அன்று வரை வரவேற்க்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, M.Sc அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் General / OBC / EXM / Women போன்றவர்களிடம் ரூ.885/- மற்றும் SC / ST / EWS / PH போன்றவர்களிடம் ரூ.531/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த BECIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Test, Interview / Interaction வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 06.03.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.