BECIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.60,000/- ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!  

By Gokula Preetha - January 25, 2023
14 14
Share

 

BECIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.60,000/- ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!  

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Speech & Swallow Therapist, Junior Technical Officer, Office Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.      

BECIL காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Speech & Swallow Therapist - 01 பணியிடம்
  • Junior Technical Officer - 02 பணியிடங்கள்
  • Office Assistant - 05 பணியிடங்கள்
BECIL பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Speech & Swallow Therapist - Audiology & Speech Therapy பாடப்பிரிவில் M.Sc Degree
  • Junior Technical Officer - Unani Medicine and Surgery பாடப்பிரிவில் Bachelor's Degree (BUMS)
  • Office Assistant - Graduate Degree
BECIL பணிக்கான சம்பளம்:
  • Speech & Swallow Therapist பணிக்கு ரூ.60,000/- என்றும்,
  • Junior Technical Officer பணிக்கு ரூ.35,000/- என்றும்,
  • Office Assistant பணிக்கு ரூ.25,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
BECIL பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EXM / Women - ரூ.885/-  
  • SC / ST / PH / EWS / PH - ரூ.531/-
BECIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Interaction மற்றும் Skill Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

BECIL இறுதி நாட்கள்:
  • Speech & Swallow Therapist - 07.02.2023
  • Junior Technical Officer - 09.02.2023
  • Office Assistant - 09.02.2023
Download Notification Link 1
Online Application Link
Share
...
Gokula Preetha