BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Monitor பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Monitor பணிக்கு என மொத்தமாக 27 பணியிடங்கள் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த BECIL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer, Journalism, Mass Communication போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது PG Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Monitor பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.28,635/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது (Biodata) விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து hrsection@becil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.01.2023) அனுப்ப வேண்டும்.