BECIL நிறுவனத்தில் 159 காலிப்பணியிடங்கள் - 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!  

By Gokula Preetha - February 17, 2023
14 14
Share
BECIL நிறுவனத்தில் 159 காலிப்பணியிடங்கள் - 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!  


BECIL நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Medical Officer (Aysh), Pharmacist, Jr. Physiotherapist, Technician போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 159 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

BECIL பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Medical Officer (Aysh), Pharmacist, Jr. Physiotherapist, Technician, Junior Engineer, Programmer, Lower Division Clerk, Assistant Dietician போன்ற பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 159 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

BECIL பணிக்கான கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree, B.Sc, BE, B.Tech, M.Sc, Master Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BECIL பணிக்கான வயது விவரம்:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

BECIL பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.13,290/- முதல் ரூ.56,100/-  வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

BECIL பணிக்கான தேர்வு முறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test, Interview / Interaction ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EXM / Women - ரூ.885/-
  • SC / ST / EWS / PH - ரூ.531/-  
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (07.03.2023) https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.      

Download Notification Link
Online Application Link
Share
...
Gokula Preetha