மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Engineer Adhoc (Fame-II Coordination Cell) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.45,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer Adhoc (Fame-II Coordination Cell) பணிக்கு என 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Engineer Adhoc (Fame-II Coordination Cell) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electricals, Electronics, Instrumentation பாடப்பிரிவில் BE, B.Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த மத்திய அரசு நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
22.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Interview / Interaction மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Engineer Adhoc (Fame-II Coordination Cell) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 20.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.