பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Project Engineer, Project Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் (BDL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, ITI, BE, B.Tech, B.Sc, ME, M.Tech, MBA, MSW, PG Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த BDL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 04.03.2023 மற்றும் 05.03.2023 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://bdl-india.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.