இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி நிலையம் (BARC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultants பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
BARC நிறுவனத்தில் காலியாக உள்ள Consultants பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Consultants பணிக்கு அரசு நிறுவனங்களில் Admin மற்றும் Accounts துறைகளில் Group A, Group B Officer Cadre கீழ்வரும் Superannuation பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இந்த BARC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
Consultants பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (17.02.2023) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.