மத்திய அரசின் UPSC ஆணையத்தில் 40+ காலிப்பணியிடங்கள் || பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!  

By Gokula Preetha - February 24, 2023
14 14
Share
 
மத்திய அரசின் UPSC ஆணையத்தில் 40+ காலிப்பணியிடங்கள் || பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!  


UPSC என்னும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மத்திய அரசின் கீழ்வரும் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, சம்பளம் போன்ற பணி குறித்த விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

UPSC பணி பற்றிய விவரங்கள்:

காலியிடங்கள்: Assistant Director பணிக்கு என 01 பணியிடமும், Assistant Library and Information Officer பணிக்கு என 01 பணியிடமும், Specialist Grade - III (Radio-diagnosis) பணிக்கு என 14 பணியிடங்களும், Specialist Grade - III (Obstetrics and Gynaecology) பணிக்கு என 12 பணியிடங்களும், Specialist Grade - III (Tuberculosis) பணிக்கு என 03 பணியிடங்களும், Deputy Director of Mines Safety (Electrical) பணிக்கு என 03 பணியிடங்களும், Deputy Ore Dressing Officer பணிக்கு என 05 பணியிடங்களும், Mineral Officer (Intelligence) பணிக்கு என 04 பணியிடங்களும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் காலியாக உள்ளது.          
 
விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி: இப்பணிகளுக்கு CA, CMA, CFA, Diploma, MBA, PG Diploma, Bachelor's Degree, Master Degree, MBBS Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு: இந்த UPSC சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் 30 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

பணிக்கான சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பொருத்தமான நபர்களுக்கு Level - 07, 08, 11, 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்த UPSC சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள முகவரியில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதி நாள்: 25.03.2023 அன்று முதல் 16.03.2023 அன்று வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என பரிசீலிக்கப்படும். 

Download Notification Link
Online Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us