அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.30,000/- ஊதியம் || Engineering முடித்தவர்கள் தேவை!  

By Gokula Preetha - February 16, 2023
14 14
Share
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.30,000/- ஊதியம் || Engineering முடித்தவர்கள் தேவை!  


Project Associate, Technical Assistant பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Associate - 01 பணியிடம்
  • Technical Assistant - 02 பணியிடங்கள்
அண்ணா பல்கலைக்கழக கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற  கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE அல்லது M.Sc பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Anna University சம்பள விவரம்:
  • Project Associate பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Technical Assistant பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.  
Anna University தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anna University விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 25.02.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.   

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha