அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு - ஒரு நாளுக்கு ரூ.821/- ஊதியம்!!  

By Gokula preetha - January 28, 2023
14 14
Share
அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு - ஒரு நாளுக்கு ரூ.821/- ஊதியம்!!  

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Professional Assistant - I, II,  III மற்றும் Peon பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.821/- ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.  

அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Professional Assistant I - 03 பணியிடங்கள்
  • Professional Assistant II - 02 பணியிடங்கள்
  • Professional Assistant III - 02 பணியிடங்கள்
  • Peon - 01 பணியிடம்
Professional Assistant / Peon கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Professional Assistant I - BE, B.Tech Degree
  • Professional Assistant II - M.Sc Degree
  • Professional Assistant III - Diploma
  • Peon - 08ம் வகுப்பு
Professional Assistant / Peon வயது விவரம்:
  • Professional Assistant I, Peon பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய நாளின் படி, 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Professional Assistant / Peon ஊதிய விவரம்:
  • Professional Assistant I பணிக்கு ரூ.821/- என்றும்,  
  • Professional Assistant II பணிக்கு ரூ.771/- என்றும்,
  • Professional Assistant III பணிக்கு ரூ.699/- என்றும்,

Peon பணிக்கு ரூ.424/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.

Anna University தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Shortlist மற்றும் Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Anna University விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Anna University சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Anna University இறுதி நாட்கள்:
  • Professional Assistant I - 08.02.2023
  • Professional Assistant II - 11.02.2023
  • Professional Assistant III - 11.02.2023
  • Peon - 08.02..2023

Download Notification & Application Form PDF 1

Download Notification & Application Form PDF 2

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us