Air India நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Cabin Crew பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Cabin Crew பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Air India நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த Air India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் Cabin Crew பணியில் முன்னனுபவம் உள்ளவர்களுக்கு 05 ஆண்டுகள் (32 வயது) வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
Cabin Crew பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Air India நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.02.2023 அன்று முதல் 23.02.2023 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த Air India நிறுவன பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.