Air India Express நிறுவனத்தில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை - நேர்காணல் மட்டுமே!
Air India Express நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Trainee Cabin Crew பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Air India Express நிறுவனத்தில் Trainee Cabin Crew பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Trainee Cabin Crew பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த Air India Express நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Trainee Cabin Crew பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Air India Express நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
இந்த Air India Express நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 02.02.2023, 09.02.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Trainee Cabin Crew பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து "Submit" பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.