ரூ.76,050/- மாத சம்பளத்தில் NCRTC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

By Gokula Preetha - February 25, 2023
14 14
Share
ரூ.76,050/- மாத சம்பளத்தில் NCRTC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

மத்திய அரசின் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் ஒன்றான NCRTC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Advisor / Public Transport Studies பதவிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான வழிமுறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.      

NCRTC நிறுவன பணிக்கான விவரங்கள்:

காலியாக உள்ள பணியிடங்கள்: Advisor / Public Transport Studies என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி: இந்த NCRTC நிறுவன பணிக்கு BE / B.Tech பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணிக்கான அனுபவம்: இப்பணிக்கு பதிவு செய்ய விரும்பும் நபர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் Metro Railway நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 25 வருடங்கள் சேவை செய்ய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான வயது: 65 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

சம்பளம் பற்றிய விவரம்: ரூ.76,050/- Advisor / Public Transport Studies பணிக்கு என தேர்வு செய்யப்படும் பொருத்தமான நபருக்கு மாத சம்பளமாக அளிக்கப்படும்.  

பணியமர்த்தப்படும் முறை: Advisor / Public Transport Studies பணிக்கு சரியான நபர்கள் Shortlist மற்றும் Interview என்னும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

பணிக்கு விண்ணப்பிக்கும் விதம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://www.ncrtc.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பத்தை முதலில் Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலை விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.    

விண்ணப்பிப்பதற்கான கால அளவு: 10.03.2023 என்ற நாளுக்குள் பெறப்படும் Online விண்ணப்பங்களும், 15.03.2023 என்ற நாளுக்குள் பெறப்படும் தபால் விண்ணப்பங்களும் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.   


 

Share
...
Gokula Preetha